திண்டுக்கலில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் களுக்கு இன்று பாராற்றுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன:
திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற 78 வது சுதந்திர தின விழாவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி பூங்கொடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பிரதீப் ஆகியோர் திருக்கரங்களில் பழனி அரசு மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிமைக்காக பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் திரு OP செந்தில் அவர்களுக்கு சிறந்த மருத்துவர் என பாராட்டி பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்கள்.உடன் அவரது துணைவியாரும்,பழனி அரசு குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் திருமதி ரேவதி செந்தில் அவர்களும் இவ்விழாவில் பங்கேற்றார்கள். சேவை உள்ளம் மருத்துவ தம்பதியினரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment