முப்பெரும் குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் மனித சங்கிலி போராட்டம்
திண்டுக்கல் மாநகராட்சி முன்பாக இன்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய முப்பெரும் குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முப்பெரும் சட்டங்களில் பாதிப்புகளை எடுத்துரைக்க துண்டு பிரசுரங்கள் அளிக்கப்பட்டது.திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக தலைவர் குமரேசன் மற்றும் செயலாளர் கென்னடி உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment