திண்டுக்கல் மாவட்டம் முகூர்த்தம், விடுமுறையையொட்டி பழனிக்கு படையெடுத்த பக்தர்கள் கூட்டம்:
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் பழனிக்கு வார விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கேரளாவில் இருந்து ஏராளமானோர் சாமி தரிசனத்திற்காக பழனிக்கு வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் முகூர்த்தநாள் என்பதால் பழனி அடிவார பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் பல்வேறு விஷேசங்கள் நடைபெற்றது. மேலும் பஸ்நிலையம், அடிவாரம், படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார் நிலையம், மின்இழுவை நிலையம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மலைக்கோவிலில் திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment