பெண்ணை கொலை செய்து அம்மைநாயக்கனூர் அருகே உடலை புதைக்க வந்த 2 பேர் கைது ஆம்னி வேன் பறிமுதல்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடலூரை சேர்ந்த பிரின்சி என்பவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் பிரின்சியை கொலை செய்து திவாகர் மற்றும் இந்திரகுமார் ஆகிய 2 பேரும் ஆம்னி வேனில் பல்லடத்திலிருந்து அம்மையநாயக்கனூர் அருகே புதைப்பதற்காக கொண்டு வந்தனர்.
இந்நிலையில் மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில் அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் குருவத்தாய் தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொடைரோடு டிராக்டர் கம்பெனி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஆம்னி வேனை சோதனை செய்ததில் பிரின்சி என்ற பெண்ணை கொலை செய்து உடலை அப்பகுதியில் புதைப்பதற்காக வந்ததாக தெரிய வந்ததை அடுத்து இந்திரகுமார் மற்றும் திவாகர் இருவரையும் போலீசார் கைது செய்து அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment