திண்டுக்கல்லில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேர் கைது
திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திர மோகன், சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திண்டுக்கல் பொன்மாந்துறை புது ப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலங்குளத்து கரையின் அருகில் ஒரு கும்பல் தனியாக அமர்ந்திரு ந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அங்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் ஆர். வி.நகரைச் சேர்ந்த அஜித்குமார் (வயது 21), முத்தழகுபட்டியைச் சேர்ந்த குழந்தையேசு (24), கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டி யைச் சேர்ந்த பாண்டிய தினேஷ் (24), பூபதி ராஜா 25), பொன் மாந்துரையைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ (49) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் மது குடித்து, ஜாலியாக வாழ்வதற்கு பணம் தேவை என்பதால் பைபாஸில் வரும் வாகனங்களை வழிமறித்து கொள்ளை யடிப்பதற்கும் திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து இரும்பு கம்பி,உருட்டு கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment