காதலர்களைக் கட்டிப்போட்டு கத்தி முனையில் 2 இளம்பெண்களை கற்பழித்த 3 வாலிபர்கள் கைது தப்பி ஓடிய ரவுடிக்கு வலை
திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 19, 17,13 வயதில் 3 மகள்கள் உள்ளனர். இதில் 19 வயது இளம்பெண்ணுக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறு பாடால் பிரிந்து பெற்றோரு டன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் 19, 17 வயது சகோதரிகளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் அனைவரும் கடந்த 30-ந் தேதி இடைய கோட்டையில் நடந்த ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்றனர். பின்னர் மீண்டும் ஊருக்கு திரும்பினர்.
அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு சாலையோரம் நின்று கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரண்குமார் (21). முத்தழகுபட்டியைச் சேர்ந்த வினோத்குமார் (26). முருகபவனத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (22) ஆகிய 3 பேரும் அந்த சிறுமிகளிடம் எதற்காக இங்கு வந்தீர்கள்? யாருடன் வந்தீர்கள் என கேட்டுள்ளனர். ஓட்டலில் சாப்பிட்ட பில் தொகையை கொடுத்து விட்டு வெளியே வந்த காதலர்கள் அவர்களிடம் தங்களுடன் வந்ததாக கூறியுள்ளனர் .
பின்னர் அவர்கள் 3 பேரும் சுள்ளான் என்ற பிரசன்ன குமார் (25) என்பவருக்கு போன் செய்து 2 சிறுமிகள் சிக்கியுள்ளனர். அவர்களை அழைத்து வரவா? என கேட்டுள்ளனர். அவரும் சிறுமிகளை அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து காதலர்கள் 2 பேரையும் ஒரு பைக்கில் ஏற்றிக் கொண்டு, சிறுமிகள் 2 பேரையும் மற்றொரு பைக்கில் ஏற்றிக் கொண்டு தாமரைக்குளம் என்ற பகுதிக்கு வந்துள்ளனர்.
வந்தவுடன் காதலர்கள் இருவரையும் கட்டிப்போட்டனர். அந்த இடத்துக்கு பிரசன்ன குமாரும் வந்து விடவே 4 வாலிபர்களும் சேர்ந்து 2 சிறுமிகளை மாறி மாறி கற்பழித்தனர். காதலர்கள் கண் முன்னே நடந்த இந்த சம்பவத்தால் சிறுமிகள் மிகவும் வேதனையடைந்தனர். இரவு முழுவதும் 4 வாலிபர்களும் தங்கள் இச்சையை தீர்த்துக்கொண்டு அதிகாலை நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தனர். பின்னர் இது குறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சரண்குமார்,வினோ த்குமார், சூரியபிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய பிரசன்ன குமாரை தேடி வருகின்றனர். பிரசன்ன குமார் மற்றும் சரண்குமார் மீது திண்டுக்கல் தாலுகா, மேற்கு தாடிக்கொம்பு, வேடசந்தூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை. கொள்ளை, வழிப்பறி, அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட 3 பேரும் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்த ப்பட்டு சிறையில் அடை க்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து கத்தி, மோட்டார் சைக்கிள், செய்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment