திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமை
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் குற்ற வழக்குகள் குறைப்பது குறித்தும், கோப்புக்கு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும், காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு விரைவாக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் ஏடிஎஸ்பி. வெள்ளைச்சாமி, அனைத்து உட்கோட்ட DSP-கள், அனைத்து ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment