பழனி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 16 November 2023

பழனி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா

 


பழனி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா


திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் திருக்கார்த்திகை திருவிழா 7 நாட்கள் நடைபெறும்.



இந்த விழா வருகிற 20-ந் தேதி மலைக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது. அன்று மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜைக்கு பின்னர் காப்பு கட்டப்படும். மாலை 6 மணிக்கு சண்முகார்ச்சனை, 6.30 மணிக்கு சண்முகர் தீபாராதனை, மாலை 7 மணிக்கு தீபாராதனை மற்றும் தங்கரத புறப்பாடு ஆகியவை நடைபெறுகிறது. 25-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் ஏற்றுதல், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையின் போது நடைபெறுகிறது. 26-ந்தேதி திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.



அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். யாகசாலை தீபாராதனையும், மலைக்கோவிலில் 4 மூலைகளிலும் தீபம் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். மாலை 6.15 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறுகிறது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad