திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்:
தொப்பக்காவலசில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 50 பேர் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் தி.மு.க.வில் இணைந்தனர் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொப்பம்பட்டி ஊராட்சி கள்ளிமந்தயம் தொப்பக்காவலசு கிராமத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர் இந்நிகழ்வில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் சி ராஜாமணி தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பிசி தங்கம். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment