திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள தலைமை தபால் அலுவலகம் அருகே கொள்ளைநகர் வடக்கு போலீசார் விசாரணை
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள தலைமை தபால் அலுவலகம் அருகே தனியார் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இங்கே ஆடிட்டர் அலுவலகம், போட்டோ ஸ்டூடியோ மற்றும் கம்ப்யூட்டர் மையம் அமைந்துள்ளது. தீபாவளி பண்டிகை நேரம் என்பதால் பூட்டியிருந்த அலுவலகத்தை ஒவ்வொன்றாக பூட்டை உடைத்து திறந்த கொள்ளையர்கள் ஒரு மடிக்கணினி,ஒரு செல்போன், இரண்டு கேமராக்களை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
இது குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த நகர் வடக்கு போலீசார், சுற்றியுள்ள இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் கொள்ளையர்களின் முகம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment