தாடிக்கொம்பு பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது
திண்டுக்கல்லை அடுத்த ஓடைப்பட்டி அருகே கடந்த செப்டம்பர் மாதம் ஆனந்தசுதன் என்பவரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் முரளிராஜா, ஹானஸ்ட்ராஜ், இன்னாசிஸ்டீபன்ராஜ், ராபின்செபாஸ்டின், பழனிச்சாமி ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட S.P.பாஸ்கரன் பரிந்துரையின் பேரில், கலெக்டர் பூங்கொடி அவர்கள் 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment