டிப்பர் லாரி மோதி ஒருவர் பலி.
திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டியை சேர்ந்தவர் குப்புசாமி-55. இவரது மனைவி மணிமாலா-50. ஆகியோர் மார்க்கம்பட்டியில் இருந்து வேடசந்தூர் வழியாக வடமதுரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது
ஸ்ரீ ராமாபுரம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது பஸ் ஸ்டாப்பில் வேடசந்தூரில் இருந்து வடமதுரை சென்ற தனியார் பேருந்து நின்று பயணிகளை இறங்கி கொண்டிருந்தனர்.
அப்போது இந்த பேருந்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த குப்புசாமி, நின்ற பேருந்தை கடந்து போக முயற்சித்துள்ளார்.
அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இதில் மணிமாலா பலத்த காயங்களுடன் தூக்கி வீசப்பட்டார்.
இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த குப்புசாமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரணை நடத்தி வருகிறார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment