திண்டுக்கல்லில் சித்திரைத் திருவிழா பத்மகிரி கிரிவலம்-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
சித்திரைத் திருவிழா பத்மகிரி கிரிவலம் சித்ரா பௌர்ணமி தினத்தில் (மலைக்கோட்டை) பத்மகிரி மலையை வலம் வருவது 108 மகா சிவாலயங்களில் கும்பாபிஷேகம் காண்பது ஒப்பாகும். இதனை முன்னிட்டு மே-5ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மலைக்கோட்டை அடிவாரத்தில் இருந்து திண்டுக்கல் ஸ்ரீ அபிராமி பக்தர்களுக்கு குழு சார்பில் பத்மகிரி கிரிவலம் துவங்கி, மலைக்கோட்டை சுற்றி அடிவாரத்திற்கு வந்தடைந்தது. ஊர்வலத்தில் அபிராமி அம்மன்-பத்மகிரீஸ்வரர் பள்ளக்கில் செல்ல, பின்னே நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இவ்விழாவில் பக்தர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜா, இந்து முன்னணி மாநில தலைவர்
காடேஷ்வரா சுப்ரமணியம், மாநில செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அன்னதானத்தை அதிமுக முன்னாள் நிர்வாகி ராமுத்தேவர் துவக்கி வைத்தார். 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment